Wednesday, 23 March 2016

சிங்கப்பூரில் தமிழை ஆட்சிமொழியாக அறிவித்தபோது மலையாளிகள் எங்கள் மலையாள மொழிக்கும் அத்தகைய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என வற்புறுத்தினார்கள்.
அதற்கு, 'சிங்கப்பூர் என்கிற தேசம் அமைய போராடியவர்கள் தமிழர்கள். அதற்கான நன்றிக்கடனாகவே நான் தமிழை ஆட்சி மொழியாக்கி இருக்கிறேன்'
என வெளிப்படையாகச் சொன்னவர் லீ குவான் இயூ.
இலங்கையின் தமிழினபடுகொலையை கடுமையாக எதிர்த்தவர் லீ குவான் இயூ. இந்திய விடுதலைகாக எத்தனை லட்சம் தமிழர்கள் தன்னுயிரை மாய்த்து போராடினார்கள், தமிழர்கான உரிமையை தந்ததா இந்தியா??
இந்தியாவின் அடையாளமான பழைமையான நம் தமிழை ஆட்சி மொழியாக ஏற்றதா இந்தியா??
இலங்கை தமிழின படுகொலைக்கு உதவியதே இந்தியா தானே..
இலங்கை விடுதலைக்காக தமிழர்கள் செய்யாத தியாகமா.. சிந்தாத இரத்தமா??
தமிழர்களுக்கு என்ன செய்தது இலங்கை??
பர்மா நேபாளம் மலேசியா என தமிழர்கள் வாழ்ந்த நாடெல்லாம் தமிழர்களின் பங்களிப்பில் விடுதலையடைந்தது, முன்னேற்றம் கண்டது நன்றிக்கடனாய் என்ன செய்தது?? அடித்து துரத்தியது!!
பிற மொழியாளரான பிற இனத்தவரான திராவிடரை ஐம்பது ஆண்டுகளாய் ஆள விட்டோம் தமிழகத்தை..
அதற்கு நன்றிக்கடனாய் கூட தமிழை தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக்கவில்லையே திராவிடர்கள்!!
இப்படி தமிழினத்தை உலகமே வஞ்சிக்க..
தமிழரை தன் நாட்டிலேயே திராவிடர் ஒடுக்க..
சிங்கையின் தந்தை லீ குவான் இயூ தமிழையும் தமிழரையும் அரவணைத்த செயல் தமிழர் நெஞ்சில் என்றும் நீங்கா!!

No comments:

Post a Comment